/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்' பொது சுகாதார கோட்டம் அறிவிப்பு
/
நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்' பொது சுகாதார கோட்டம் அறிவிப்பு
நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்' பொது சுகாதார கோட்டம் அறிவிப்பு
நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் 'கட்' பொது சுகாதார கோட்டம் அறிவிப்பு
ADDED : மே 13, 2024 05:02 AM
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு நகர்களுக்கு நாளை முதல் குடி நீர் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
முதலியார்பேட்டை காலனி மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால், நாளை 14ம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணி வரை முதலியார்பேட்டை ெஹல்த் காலனி, சுதானா நகர், பிரியதர்ஷினி நகர், மறைமலை நகர், திருமகள் நகர், திவான் கந்தப்பா நகர் மற்றும் அதனை சுற்றிலுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும்.
இதேபோல் புதுச்சேரி தியாகுமுதலியார் நகரில் உள்ள கீழ் நிலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 15ம் தேதி மதியம் 12 மணி முதல் 2மணி வரை, தியாகுமுதலியார் நகர், ஜான்பால் நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், தில்லை நகர் புவன்கரே வீதி பகுதிகளில் குடி நீர் தடைபடும்.
மேலும் முதலியார்பேட்டை உழந்தையில் உள்ள கீழ்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக வரும் 16ம் தேதி பாரதி மில் நகர், ஐயப்பசாமி நகர், திரு.வி.க., நகர், பாரதிதாசன் நகர், கடலுார் ரோடு, பட்டம்மாள் நகர், இந்திரா நகர், தில்லை நகர், புவன்கரே வீதி கிழக்கு, அப்துல்கலாம் நகர் மேற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.