/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பளத்தில் நாளை குடிநீர் விநியோகம் 'கட்'
/
உப்பளத்தில் நாளை குடிநீர் விநியோகம் 'கட்'
ADDED : செப் 11, 2024 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உப்பளம் பகுதியில் நாளை 2 மணி நேரம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்டம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
புதுச்சேரி உப்பளம் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 12ம் தேதி மதியம் 12:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை உப்பளம், வம்பாகீரப்பாளையம், நேத்தாஜி நகர், வாணரப்பேட்டை, கோலாஸ் நகர், அவ்வை நகர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.