ADDED : ஜூன் 24, 2026 09:02 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மீன் குழம்பு சாப்பிட்ட டிரைவர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த பக்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் ரஞ்சித்குமார், 32; மினிவேன் டிரைவர். இவருக்கு, திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவியும், 3 வயதில் மகன், 1 வயதில் மகள் உள்ளனர். ரஞ்சித்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மற்றும் இரவு ரஞ்சித்குமார் வீட்டில் கிளிச்சை மீன் குழம்பு சாப்பிட்டுள்ளார்.
இரவு திடீரென்று அவருக்கு வயிற்று வலியுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் வளவனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ரஞ்சித்குமாரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
