ADDED : ஜூன் 02, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: டிரைவர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேதாரப்பட்டு, மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம், 34; டாடா ஏஸ் டிரைவர். தாயுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள பொன்னுரங்கம் நேற்று மதியம் 1:00 மணியளவில், அவரது சித்தப்பா வீட்டில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை உறவினர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து பொன்னுரங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.