ADDED : ஜூன் 09, 2026 05:51 PM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் போதை பொருளுக்கு எதிராகவும், அவற்றின் தீமைகள் குறித்து போலீசார் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரியில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால், போலீசார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரியாங்குப்பம் போலீசார் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி துணை முதல்வர் விஜயா வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன் போதை பொருட்களின் தீமைகள் அவற்றின் இருந்து மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில், சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
