தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சலுான் கடைக்காரர் கொலை வழக்கு புதுச்சேரியை சேர்ந்த மேலும் 5 பேர் கைது

சலுான் கடைக்காரர் கொலை வழக்கு புதுச்சேரியை சேர்ந்த மேலும் 5 பேர் கைது

சலுான் கடைக்காரர் கொலை வழக்கு புதுச்சேரியை சேர்ந்த மேலும் 5 பேர் கைது


ADDED : ஜூன் 09, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சலுான் கடைக்காரரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் தினேஷ், 23; இவர் தீவனுாரில் சலுான் கடை வைத்திருந்தார். இவர் கடையில் சேகரமாகும் முடிகளை கடைக்கு பக்கத்தில் வசிக்கும் சுமதி, 54 வீட்டிற்கு அருகே உள்ள காலி மனையில் கொட்டியுள்ளார். இதை தட்டிகேட்டதால், சுமதிக்கும் தினேஷிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையறிந்த சுமதியின் மகன் பரத், கூலிப்படையினருடன் கடந்த 6ம் தேதி தீவனுார் வந்து தினேைஷ வெட்டிக் கொலை செய்தார்.

ரோஷணை போலீசார், பரத் உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிந்து சுமதி, அவரது கணவர் ஜேசு ஜெய மாணிக்கராஜன், புதுச்சேரி, மூலக்குளம் நாகப்பன் மகன் வைசாக், 25, ஆரோக்கியராஜ் மகன் ஜோசப்லெனின், 22; உழவர்கரை ஜெகநாதன் மகன்  ஜெயக்குமார், 27: ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி,உழவர்கரை முருகன் மகன் சூரியா, 20; மூலக்குளம் ரசூலான் மகன் யோவான் (எ) ஆரோன், 22; அரியாங்குப்பம் துரை மகன் தினேஷ், 23; சிவக்குமார் மகன் ஆகாஷ் (எ) சின்னா, 21; ரெட்டியார்பாளையம் லட்சுமணன் மகன் புவனேஷ், 23;  ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதுவரை கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான பரத் உட்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us