போதையில் வாலிபர்கள் மீது தாக்கு: விருதை போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
போதையில் வாலிபர்கள் மீது தாக்கு: விருதை போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
UPDATED : ஜூன் 09, 2026 07:28 PM
ADDED : ஜூன் 09, 2026 06:11 PM
கடலுார்: விருத்தாசலத்தில் வாலிபர்களை தாக்கி வழிப்பறி செய்த போலீஸ் ஏட்டுவை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் தினேஷ்குமார்,19; இவர், தனது நண்பர்கள் விருத்தாசலம் நல்லேந்திரன் மகன் சத்யநாராயணன்,18; பிரேம்குமார் மகன் ஜேக்கப்,18; ஆகியோருடன் கடந்த 7ம் தேதி மொபட்டில் பெரியார் நகர் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, விருத்தாசலம் காவல் நிலைய ஏட்டு ரஞ்சித், தனது நண்பர் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதி ரவுடி சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ்,24; என்பவருடன் சேர்ந்து மதுபோதையில், தினேஷ்குமார் உள்ளிட்டோரை வழிமறித்து தாக்கினார்.
தொடர்ந்து, சத்யநாராயணனின் மொபைலை பறித்துச் சென்றார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித், சுபாஷ் சந்திரபோசை நேற்று நேற்று முன்தினம் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏட்டு ரஞ்சித்தை சஸ்பெண்ட் ீக்கம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.
