ஆல்பா பள்ளியில் போதையற்ற இந்தியா திட்டம் துவக்கம்
ஆல்பா பள்ளியில் போதையற்ற இந்தியா திட்டம் துவக்கம்
ADDED : ஆக 03, 2026 06:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மேல்நிலைப் பள்ளியில் பிரதமரின் நாஷா முக்த் பாரத் சங்கல்ப் திட்ட (போதையற்ற இந்தியா) துவக்க விழா நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இணையவழியாக திட்டத்தைத் துவக்கி வைத்து நாடு முழுதும் உள்ள இளைஞர்களிடையே உரையாற்றினார். அதன் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி ஆல்பா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அதில், தேசிய இளைஞர் திட்டத்தின் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் ஆதவன் போதையற்ற இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நோக்கவுரை ஆற்றினார்.
ஆல்பா பள்ளியின் முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் சுமதி, ஆசிரியர்கள் ஜவகர், ஆனந்தன், கராத்தே பாபு, பிரவீனா ஹேமலதா, திவ்யா ஆகியோர் பள்ளியின் நிறுவனர் பாஷிங்கம் வழிகாட்டுதலின்படி செய்திருந்தனர்.
தேசிய இளைஞர் திட்டத்தின் மகளிர் அணி தலைவி ஜெயப்பிரதா நன்றி கூறினார். போதையற்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
