தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலை சிறப்பு நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: தேர்வு மையங்களில் மாற்றம்

புதுச்சேரி பல்கலை சிறப்பு நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: தேர்வு மையங்களில் மாற்றம்

புதுச்சேரி பல்கலை சிறப்பு நுழைவுத் தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: தேர்வு மையங்களில் மாற்றம்


UPDATED : ஆக 03, 2026 07:21 PM

ADDED : ஆக 03, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2026 07:21 PM ADDED : ஆக 03, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு நுழைவு தேர்விற்கு விண்ணப்பிக்க (5ம் தேதி) வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக கல்வி பிரிவு துணை பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2026-27ம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான சிறப்பு நுழைவுத் தேர்விற்கு இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு வரும் 9 ம் தேதி இரண்டு கட்டங்களாக நடக்கும். திருச்சிராப்பள்ளி, சென்னை, விஜயவாடா, பெங்களூரு, புவனேஸ்வர் மற்றும் கவுகாத்தி ஆகிய மையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களே பெறப்பட்டதால், அம்மாநில தேர்வு மையங்கள் அனைத்தும் புதுச்சேரி தேர்வு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதுச்சேரி, காரைக்கால்,மாகே, போர்ட் பிளேயர் உள்ளிட்ட நான்கு மையங்களில் நுழைவுத் தேர்வு நடக்கும்.

தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய தேர்வு மையம் குறித்த விவரங்கள் அவர்களது ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும். எனவே, தேர்வர்கள் அனைவரும் புதுப்பிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டை தேர்வுக்கு முன்பாகப் டவுண்லோடு செய்துகொளள வேண்டும்.

தகவல் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இதர நிபந்தனைகள் அனைத்தும் மாற்றமின்றித் தொடரும்.கூடுதல் விவரங்கள் மற்றும் அறிவிப்புகளுக்குப் பல்கலைக்கழகத்தின் www.pondiuni.edu.in என்ற இணைய முகவரியை பார்க்கவும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us