/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் தடுப்பு கற்றல் வழிகாட்டி நிகழ்ச்சி
/
போதை பொருள் தடுப்பு கற்றல் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஆக 29, 2024 07:11 AM

திருக்கனுார்: சுத்துக்கேணி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் கற்றல் வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அந்தோணிசாமி வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை விஜயா தொகுத்து வழங்கினார்.
இதில், திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு, போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கற்றல் வழிகாட்டி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தைகள், மகளிர்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.
ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார். இதில், சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.