/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் போதை தடுப்பு கருத்தரங்கம்
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் போதை தடுப்பு கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் போதை தடுப்பு கருத்தரங்கம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் போதை தடுப்பு கருத்தரங்கம்
ADDED : மார் 04, 2025 04:42 AM

புதுச்சேரி: மககடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல், கல்லூரியில் பொறி யியல் துறை மாணவர்களுக்கு போதை தடுப்பு விழிப்பணர்வு கருத்தரங்கம் நடந்தது.
சமூக நலத்துறை சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவர் அரவிந்தன், உளவியாலர் ராஜா ஆகியோர் போதை பொருள் பயன்பத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களுக்கு விளக்கினர்.
கல்லூரி இயக்குனர் வெங்கடாசலபதி பேசினார்.
நிகழ்ச்சியில் அகாடமிக் டீன் அன்புமலர், முனைவர் அறிவழகர், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை டீன் வேல்முருகன், வேலை வாய்ப்புத் துறை டீன் கைலாசம் மற்றும் அனைத்து டீன்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

