/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய போதை நபர் போலீசில் ஒப்படைப்பு
/
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய போதை நபர் போலீசில் ஒப்படைப்பு
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய போதை நபர் போலீசில் ஒப்படைப்பு
கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய போதை நபர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மார் 25, 2024 05:12 AM
புதுச்சேரி: காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதியில் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பிற்குள் நேற்று முன்தினம் இரவு டாடா இண்டிகா கார் (பி.ஒய் 01. பி.ஜி 0097) ஒன்று தாறுமாறாக சென்றது. சாலையோரம் சென்ற பைக்குகள் மீது மோதியபடி சென்றது.
அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் காரை துரத்தி சென்று, சுனாமி குடியிருப்பு சாலையில் மடக்கினர்.
கார் கதவை திறந்து பார்த்தபோது, டிரைவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
அவர், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிவதாகவும், ரெட்டியார்பாளையத்திற்கு செல்ல பண்ருட்டியில் இருந்து வருவதாக தெரிவித்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் அதனை ஓட்டி வந்த நபரை காலாப்பட்டு வடக்கு போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

