தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிபோதையில் ரகளை : 2 பேர் கைது 

குடிபோதையில் ரகளை : 2 பேர் கைது 

குடிபோதையில் ரகளை : 2 பேர் கைது 


ADDED : ஜூன் 22, 2026 06:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 06:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம், கே.ஆர்.பாளையத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 

காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப் பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலை  அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அதில், விழுப்புரம், பெண்ணைவலத்தைச் சேர்ந்த சிவகண்டன், 32; என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியதாக வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கே.ஆர்.பாளையம் கடை வீதியில், குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்திய விழுப்புரம், பாப்பனப்பட்டைச் சேர்ந்த கண்ணியா கணேசன், 33; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us