ADDED : ஜூன் 22, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையினை அமைச்சர் ராஜவேலு வழங்கினார்.
புதுச்சேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு 17 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 17 லட்சத்திற்கான ஆணையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரி செந்தில், நெட்டப்பாக்கம் தொகுதி என.ஆர்.காங்., மகளிர் அணி தலைவி கவுசல்யா பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
