ADDED : ஜூன் 22, 2026 04:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் செயல்படும் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, சர்வதேச யோகா தினம் பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் எஸ்.இ.ஐ., மற்றும் ஆர்.ஆர். இயக்குநர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். விளையாட்டுத் துறையின் பொறுப்பு இயக்குநர் இளையராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் உதவி இயக்குநரும் பொறுப்பு அலுவலருமான சத்தியராஜேஸ்வரன், புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி அதி காரிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், தேசிய சேவைத் திட்டத் தொண்டர்கள் மற்றும் தேசிய மாணவர் படை கேடட்டுகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
