/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
/
தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
தமிழகத்தில் பெய்யும் மழையால் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
ADDED : மே 27, 2024 05:25 AM

புதுச்சேரி: தமிழகத்தில் பெய்யும் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், ஒரு கிலோ தக்காளி ரூ. 50க்கு விற்பனையானது.
புதுச்சேரி காய்கறி மார்க்கெட்டிற்கு, தமிழகத்தின் சேலம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். ஒரு நாளைக்கு 25 டன் தக்காளி புதுச்சேரிக்கு வருகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக, புதுச்சேரிக்கு வர வேண்டிய தக்காளிவரவில்லை. இதனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புதுச்சேரி வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்கி கொண்டு வந்துள்ளனர்.
மேலும்தினசரி 25 டன் வர வேண்டிய தக்காளி தற்போது 20 டன் அளவுக்கு மட்டுமே வந்துள்ளது. இதனால் தக்காளி விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் ரூ. 20 வரை விற்பனையான தக்காளி நேற்று மார்க்கெட்டில் ரூ. 45 முதல் ரூ. 50க்கும், சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ. 55க்கும் விற்பனையானது.
தக்காளி மொத்த வியாபாரி சுந்தராஜன் கூறுகையில்; தென் தமிழக பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர வேண்டிய தக்காளி வரவில்லை. இதனால், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அதிக விலை கொடுத்து தக்காளி வாங்கிவரப்படுகிறது.
இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு 15 நாள் வரை நீடிக்கும். அடுத்த அறுவடை துவங்கியதும் விலை குறையும் என தெரிவித்தார்.
கோழி இறைச்சி விலை உயர்வு
புதுச்சேரியில் கோழி இறைச்சி கடந்த வாரம் கிலோ ரூ. 240க்கு விற்பனையானது. திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் விலை சற்று குறைந்து இருந்தது. நேற்று மீண்டும் கோழி இறைச்சி விலை உயர்ந்தது. தோல் நீக்கிய கோழி சில்லரை விற்பனை கடைகளில் ரூ. 260 முதல் ரூ. 280 வரை விற்பனையானது.

