/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர், பெருமாள் கோவிலில் இ-உண்டியல் சேவை அறிமுகம்
/
வேதபுரீஸ்வரர், பெருமாள் கோவிலில் இ-உண்டியல் சேவை அறிமுகம்
வேதபுரீஸ்வரர், பெருமாள் கோவிலில் இ-உண்டியல் சேவை அறிமுகம்
வேதபுரீஸ்வரர், பெருமாள் கோவிலில் இ-உண்டியல் சேவை அறிமுகம்
ADDED : பிப் 25, 2025 04:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், இ-உண்டியல் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ பெருந்தேவி தயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், இ-உண்டியல் சேவை துவக்க விழா நேற்று நடந்தது.
வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் இ-உண்டியல் சேவையை துவக்கி வைத்தார். கூட்ட நெரிசல் காலத்தில், பக்தர்கள் தங்களது காணிக்கையை வழக்கமான உண்டியலில் செலுத்துவதிற்கு சிரமம் ஏற்படுவதால், தற்போது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், ஆலய வளாகத்தில் 8 இ-உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.வங்கியின் புதுச்சேரி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் ரவிசங்கர் சாஹூ, உதவி பொதுமேலாளர் எபினேசர் சோபியா, புதுச்சேரி பிரதான கிளை சீனியர் மேலாளர் இளவழகன், கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வங்கியின் மண்டல மேலாளர் ரவிசங்கர் சாஹூ பேசுகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இறைபணியில் இந்த இ-உண்டியல் சேவையை துவக்கி உள்ளது என கூறினார்.