/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு சிறப்பு முகாம்
/
கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு சிறப்பு முகாம்
ADDED : மே 16, 2024 02:55 AM
புதுச்சேரி: புதுச்சேரி கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம், வரும் ஜூனில் நடத்தப்பட உள்ளதாக, துணை போக்குவரத்து ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி பகுதிக்கு உட்பட்ட, கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் வரும், ஜூன் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், மேட்டுப்பாளையம் சரக்கு ஊர்தி முனையத்தில் நடத்தப்பட உள்ளது.
சிறப்பு ஆய்வு முகாமிற்கு, அனைத்து கல்வி நிறுவனங்களை சார்ந்த, 900 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளன.
இதற்கென, போக்குவரத்து துறையில், வாகன ஆய்வாளர்கள், உதவி வாகன ஆய்வாளர்கள் தலைமையில், 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், வாகனங்களை ஆய்வு செய்து, தகுதி உள்ள வாகனங்களுக்கு, சான்றிதழ் அளித்து, வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களை பயணிக்க, சாலையில் அனுமதிக்கப்படும்.
மீறினால் உடனுக்குடன், பறிமுதல் செய்து, தகுந்த குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுபோன்ற சிறப்பு ஆய்வு காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியிலும் மேற்கொள்ளப்படும்.
அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இந்த குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, மாணவ - மாணவியரின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும், போக்குவரத்து துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.