/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா
/
அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்சுற்றுலா
ADDED : மார் 07, 2025 04:47 AM

புதுச்சேரி: முத்திரையர்பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பிர்லா கோளரங்கம் கல்விசுற்றுலா சென்றனர்.
முத்திரையர் பாளையம் அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு நடுநிலை பள்ளியில் பயிலும் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அனிதா தலைமையில் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாணவர்கள் முதலில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டு, வனத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடி வலசைப் பருவத்தில் வரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் பிர்லா கோளரங்கத்திற்கு சென்று முப்பரிமாண காட்சி, அறிவியல் பூங்கா, கோளரங்கம் காட்சியினைக் கண்டு மகிழ்ந்தனர். மகாபலிபுரத்தில் உள்ள கோயிலின் கட்டிடக்கலை, கல்வெட்டுகள் , ஐந்து ரதம் , குடைவரைக் கோயில் ஆகியவற்றையும் கண்டு மகிழ்ந்தனர்.. சுற்றுலா பயணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பாலகிருஷ்ணன், கீதா, ஏஞ்சலின் ஜெயம் , பிருந்தாவதி, சதீஷ் செந்தில், சின்னராசு ஆகியோர் செய்து மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்தனர்.