எக்மோர்–சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டிலிருந்து 28ல் புறப்படும்
எக்மோர்–சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டிலிருந்து 28ல் புறப்படும்
ADDED : ஜூன் 25, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சென்னை எக்மோர் –சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை (28ம் தேதி) செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வேயின் சேலம் டிவிஷன் அலுவலக செய்திக்குறிப்பு:
அரக்கோணம் மார்க்கத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை எக்மோர்–சேலம் எக்ஸ்பிரஸ் ரயில (வண்டி எண் 22153), சென்னை எக்மோர் ஸ்டேஷனிலிருந்து நாளை (27ம் தேதி) இரவு 11:55 மணிக்கு புறப்படவேண்டிய ரயில், 28ம் தேதி அதிகாலை 12:50 மணிக்கு செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு சேலம் சென்றடையும்.
ஒரு நாள் மட்டும் இந்த ரயில் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
