ADDED : ஜூன் 25, 2026 07:22 PM
போக்குவரத்து இடையூறு
உப்பளம் சாலையில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
புவனேஷ், முதலியார்பேட்டை.
கழிவுநீர் தேக்கம்
நெல்லித்தோப்பு சத்யா நகர் 5வது குறுக்கு தெருவில் வாய்க்கால் அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கியுள்ளது.
அபி, நெல்லித்தோப்பு.
மின் விளக்கு எரியுமா?
அரும்பார்த்தபுரம் பைபாசில் மின் விளக்கு எரியாமல் இரவில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
ராமகிருஷ்ணன், அரும்பார்த்தபுரம்.
சாலை படுமோசம்
சேதராப்பட்டு – பத்துக்கண்ணு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், சேதராப்பட்டு.
பறக்கும் இலவம் பஞ்சு
தட்டாஞ்சாவடி – கோரிமேடு செல்லும் சாலையில் உள்ள மரத்தில் இருந்து இலவம் பஞ்சு வெடித்து காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மாதவன், தட்டாஞ்சாவடி.
தெரு நாய்கள் தொல்லை
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், கோரிமேடு.
