குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 25, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி, வெள்ளவாரி ஓடை வீதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி துவங்கியது.
காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் வசதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கருவடிகுப்பம் வெள்ளவாரி ஓடை, கல்யாணசுந்தரம் வீதி மற்றும் வெள்ளவாரி ஓடை வீதி வடக்கு பகுதிகளில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
உழவர்கரை நகராட்சி சார்பில், நடந்த நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். கருவடிகுப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீரமைத்து, மக்களுக்கு தடையற்ற குடிநீர் வழங்கும் நோக்கில் இந்த புதிய குழாய் அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தொகுதி நிர்வாகிகள், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
