தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூன் 25, 2026 07:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 07:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில், தேசிய மனநல  திட்டத்தின் கீழ் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை கலெக்டர் குலோத்துங்கன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள், தேசிய மனநல திட்ட அதிகாரி பாலன், மனநல டாக்டர்கள் அரவிந்தன், மதன் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய ஊர்வலம் வழுதாவூர் சாலை வழியாக கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லாரியில் முடிவடைந்தது. அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரியை சேர்ந்த 350  மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, கதிர்காமம், இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரியில் போதை பொருட்கள் தடுப்பு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் மனநல டாக்டர் அரவிந்தன் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் மனநல பாதிப்புகள் பற்றி விளக்கம் அளித்தார். மனநல டாக்டர் மதன் மன அழுத்தம் மற்றும் தற்கொலை தடுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 

ஏற்பாடுகளை மனநல ஆலோசகர் ராஜா, உதவியாளர் வெற்றிகார்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us