ADDED : ஜூன் 25, 2026 08:20 PM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு, தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் லட்சுமி காந்தம் தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் தேன்மொழி வரவேற்றார். மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி சரண்யா, மலேரியா நோய் பரவும் விதம் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மாணவர்கள் அனைவரும் உலக மலேரியா தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சுகாதார ஆய்வாளர் முனுசாமி, மலேரியா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். சுகாதார உதவி ஆய்வாளர் ராஜவேலு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மலர்க்கொடி, கரிகாலன் மற்றும் சுகாதார உதவி ஆய்வாளர்கள் கோபி, சரவணராஜ், நிஷா, ஜெயஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.
