sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறுமிகளிடம் அத்துமீறல்: முதியவர் போக்சோவில் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல்: முதியவர் போக்சோவில் கைது

சிறுமிகளிடம் அத்துமீறல்: முதியவர் போக்சோவில் கைது


UPDATED : ஜூன் 04, 2026 06:55 PM

ADDED : ஜூன் 04, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 06:55 PM ADDED : ஜூன் 04, 2026 06:51 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலி அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள கல்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகாராஜன், 60; புளியங்கொட்டை வியாபாரம் செய்து வருகிறார். அவர், வியாபாரத்திற்கு சென்ற போது, குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் 8 மற்றும் 13 வயது மகள்கள் வீட்டில் தனியாக இருந்த போது, குடிக்க தண்ணீர் கேட்டார்.

அப்போது, ஒரு சிறுமி தண்ணீர் எடுப்பதற்கு வீட்டில் உள்ளே சென்ற போது, மற்றொரு சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். பின்னர் வீட்டிற்குள்ளே சென்று மற்றொரு சிறுமியிடமும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமிகள் இருவரும் அழுதுகொண்டே, தனது தாய்க்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சிறுமியின் தாய், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார் மகாராஜனை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us