ADDED : ஆக 08, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அருகே தீ விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் மாலிக் சாயபு,86; டைலர் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29ம் தேதி தனது கடையில் துணி தைத்து கொண்டிருந்தார். அப்போது கொசுவத்தி பற்றவைத்த குச்சியை அவர் கீழே போட்ட போது, அந்த தீ துணியில் பட்டு கையிலியில் பிடித்து உடலில் தீப்பிடித்தது.
இதில், இரு கால்கள் மற்றும் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்ட அப்துல் மாலிக் சாயபுவை குடும்பத்தார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
