மத்திய அமைச்சர் வருகையொட்டி மதுபான கடைகளை மூட உத்தரவு
மத்திய அமைச்சர் வருகையொட்டி மதுபான கடைகளை மூட உத்தரவு
ADDED : ஆக 08, 2026 05:31 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை யொட்டி, மதுபான கடைகள் மற்றும் ஓட்டல்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் துணை ஆணையர் (கலால்) அலுவலக செய்திக்குறிப்பு :
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருவதை யொட்டி, சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இன்று (9ம் தேதி) குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்ள மதுபான கடைகள், சாராய கடைகள், மதுபானம் பரிமாறும் ஓட்டல்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமம் பெற்றவர்கள், உரிமம் பெற்ற வளாகங்கள், கடைகள், ஓட்டல்கள், உணவகங்களை மூடி வைக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
இன்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, நியூ லோக் நிவாஸ் – ஓட்டல் அதிதி சந்திப்பு – ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு , இ.சி.ஆர்., – சிவாஜி சதுக்கம், கோரிமேடு போலீஸ் மைதானம், ராஜிவ் சதுக்கம் – லதா ஸ்டீல் ஹவுஸ், இ.சி.ஆர்., – விமான நிலைய சாலை – என்.சி.சி., அலுவலகம், லாஸ்பேட்டை – விமான நிலையம் புதுச்சேரி ஆகிய வழித்தடங்களில் உள்ள கடைகளை மூட அறிவுறுத்தப்படுகிறது.
இந்த அறிவுறுத்தல்களில் ஏதேனும் மீறல் அல்லது தவறு ஏற்பட்டால் உரிமம் பெற்றவர் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
