நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூரில் முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் பேட், புதுநகர் முதல் தெருவை சேர்ந்தவர் முனுசாமி, 75. இவருக்கு குடி பழக்கம் உள்ளது. இதனால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 19ம் தேதி இரவு வலி அதிகமானதால், அதற்கான மருந்து சாப்பிட்டு விட்டு, வீட்டு திண்ணையில் படுத்து துாங்கினார். மறுநாள் காலை அவரது குடும்பத்தினர் பார்த்தபோது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கினார்.
குடும்பத்தினர் அவரை மீட்டு, பாகூர் மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

