/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக்கூட்டம்
/
தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக்கூட்டம்
ADDED : ஏப் 02, 2024 04:10 AM

காரைக்கால் : காரைக்காலில் லோக்சபா தேர்தலையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி நேற்று தேர்தல் பார்வையாளர் (காவல்) அமர்தீப்சிங் ராய் வந்திருந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் தேர்தல் சம்பந்தமான அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகம் செய்துள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, மற்றும் எம்.சி.எம்.சி.,மீடியா மானிட்டரிங் செல் போன்றவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து தேர்தல் பார்வையாளர் அமர்தீப்சிங் ராய் தேர்தல் அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
மேலும் காரைக்கால் எல்லை பகுதியான வாஞ்சூரில் சோதனைச் சாவடியை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அனைத்து வாகனங்களை சோதனைக்கு பின்னர் அனுமதிக்கவேண்டும்.அறிஞர் அண்ணா கல்லுாரியில் அமைந்துள்ள பட்டம் மேற்படிப்பு மையத்தில் உள்ள வாக்கு என்னும் அறை மற்றும் பாதுகாப்பு அறை ஆகியவற்றின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில் சீனியர் எஸ்.பி., மனீஷ்,தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஜான்சன், சச்சிதானந்தம்,மாவட்ட எஸ்.பி.,க்கள் சுப்பிரமணியன்,பாலச்சந்தர், துணை மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில்நாதன்,நோடர் அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

