/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பார்வையாளர் காரைக்காலில் ஆய்வு
/
தேர்தல் பார்வையாளர் காரைக்காலில் ஆய்வு
ADDED : ஏப் 04, 2024 12:37 AM
காரைக்கால்: காரைக்காலில் லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையங்களை மத்திய தேர்தல் பார்வையாளர் அசித்தா மிஸ்ரா ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி, மத்திய தேர்தல் பார்வையாளர் (பொது) அசித்தா மிஸ்ரா வருகை புரிந்தார். பின்னர் கலெக்டர் மணிகண்டன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து, கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் ஆய்வு செய்த அவர், ஓட்டுச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சோதனைச் சாவடிகளில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்கள் சந்தித்து தெரிவிக்கலாம். பொதுமக்கள் தொலைபேசி மற்றும் மொபைல் போன் மூலம் 04368 - 293100 மற்றும் 9443991408 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவுறுத்தினார். ஆய்வின்போது எஸ்.பி.,பாலச்சந்தர், சப் இன்ஸ்பெக்டர் குமரன் உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

