/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பாதுகாப்பு போலீசார் ஆலோசனை
/
தேர்தல் பாதுகாப்பு போலீசார் ஆலோசனை
ADDED : ஏப் 14, 2024 05:00 AM
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், தேர்தல் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து,போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன், தவளக்குப்பம், முதலியார்பேட்டை போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதியில் தேர்தல் நடக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தலில் வாக்காளர்கள் வாக்க அளிக்கும்போது, தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது, கட்சியினர் இடையே ஏற்படும் பிரச்னைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தினர்.

