/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராமப்புற பகுதிகளுக்கு... விரைவில் எலக்ட்ரிக் பஸ்
/
கிராமப்புற பகுதிகளுக்கு... விரைவில் எலக்ட்ரிக் பஸ்
கிராமப்புற பகுதிகளுக்கு... விரைவில் எலக்ட்ரிக் பஸ்
கிராமப்புற பகுதிகளுக்கு... விரைவில் எலக்ட்ரிக் பஸ்
ADDED : ஆக 18, 2024 04:31 AM
புதுச்சேரி, காரைக்கால் கிராமப் பகுதி சேவைக்காக 25 எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் வருகிறது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம், ஆகிய நான்கு பிராந்தியங்களுக்கும் சேர்த்து (ஏசி பஸ்கள் உட்பட) 108 பஸ்கள் தற்போது இயக்கி வருகின்றன. புதுச்சேரியில் மட்டும் கிராமப்பகுதிகளுக்கு 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால் கிராமப்புற பகுதிகளுக்கு கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு சாலைப்போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 25 எலக்ட்ரிக் பஸ்களை 80 சதவீதம் மத்திய அரசு, 20 சதவீதம் மாநில அரசு நிதியின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.
ஒன்பது மீட்டர் நீளம், 35 இருக்கை கொண்ட பஸ்சின் விலை ஒரு கோடி ரூபாய். 12 மீட்டர் நீளம் 35 இருக்கையுடன் கூடிய பஸ்சின் விலை 1 கோடியே 15 லட்சம் ரூபாய். மொத்தம் 30 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் பஸ்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் துாரம் வரை தடையின்றி பயணிக்கும்.
புதுச்சேரி கிராமப் பகுதிகளுக்கு 15 பஸ்களும், காரைக்கால் கிராம பகுதிக்கு 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக பணி மனையில் சார்ஜிங் பாயிண்ட் மற்றும் பராமரிப்பு கூடம் ஆகியவை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் முதல் முறையாக எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. வரும் அக்டோபர் மாதத்தில் எலக்ட்ரிக் பஸ்கள் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

