ADDED : ஆக 07, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை மெயின்ரோடு, புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் சிவராஜன். வம்பாக்கீரப்பாளையம் மகளிர் ஐ.டி.ஐ.,யில் அட்டண்டர். இவரது மூன்றாவது மகன் சந்தோஷ், 40; எலக்ட்ரீஷியன். திருமணமாகவில்லை.
கடந்த ஒரு வருடமாக தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி சந்தோஷ் கேட்டு வந்தார். சந்தோஷிற்கு செவ்வாய் தோஷம் இருந்ததால் பெண் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரவு, திருமணம் செய்து கொள்ளாததால் நண்பர்கள் கேலி செய்வதாக தனது தாய் கிரிஜாவிடம் கூறி வருத்தப்பட்டார்.
அடுத்த சில நிமிடம் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சந்தோஷ் துாக்கில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.