/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு தகவல் பலகை
/
கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு தகவல் பலகை
ADDED : மார் 22, 2024 05:51 AM

காரைக்கால் : காரைக்காலில் தேர்தல்துறை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட தேர்தல்துறை சார்பில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு கலெக்டர் மணிகண்டன் அறிவுறுத்தலில் பேரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம், கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு மின்னணு தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நேர்மையாக வாக்களிக்க வேண்டும். நமது வாக்கு நமது உரிமை. உங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல. வாக்கினை சரிபார்த்திட காகித தணிக்கை, தேர்தல் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1950, போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

