/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் அவசரகால முதலுதவி பயிற்சி
/
வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் அவசரகால முதலுதவி பயிற்சி
வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் அவசரகால முதலுதவி பயிற்சி
வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் அவசரகால முதலுதவி பயிற்சி
ADDED : ஏப் 28, 2024 03:58 AM

வில்லியனுார் : வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில், மாணவர்களுக்கு அவசரகால விபத்து மற்றும் முதலுதவி செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியூர் வெங்கடேஸ்வரா பார்மசி கல்லுாரியில் மாணவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அவசரகால விபத்து மற்றும் மருத்துவ முதலுதவி செய்முறை பயிற்சி, அலர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டது.
கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் நடந்த பயிற்சிக்கு, பார்மசி கல்லுாரி முதல்வர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
கல்வி ஆலோசகர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். அலர்ட் தொண்டு நிறுவன புதுச்சேரி கிளை பொதுச்செயலாளர் தங்கமணிமாறன் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.
முதலுதவி தொடர்பான பயிற்சியை காரல்மார்க்ஸ் வழங்கினார். பயிற்சியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கல்லுாரி துணை முதல்வர் நிர்மலா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜீவிதா, சென்னியப்பன், துணை பேராசிரியர்கள் ஜனரஞ்சனி ஆகியோர் செய்தனர்.

