/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குதிரையேற்ற போட்டிகள் ஆரோவில்லில் 28ல் துவக்கம்
/
குதிரையேற்ற போட்டிகள் ஆரோவில்லில் 28ல் துவக்கம்
ADDED : மார் 23, 2024 11:35 PM

புதுச்சேரி: ஆரோவில்லியில் 160 குதிரைகள் பங்கேற்கும் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்குகிறது.
ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்ற பயிற்சி பள்ளி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு 25வது குதிரை யேற்ற போட்டி, வரும் 28ம் தேதி துவங்குகிறது.
பயிற்சி நிறுவனர் ஜாக்குலீன் கூறுகையில், 'ஆரோவில் குதிரையேற்ற போட்டி வரும் 28ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. குதிரைகள் நடைபயிற்சி, ஜம்பிங், சீனியர், ஜூனியர், சிறுவர் என பல பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
20க்கும் மேற்பட்ட கிளப்புகளில் இருந்து 120 குதிரைகள், புதுச்சேரியைச் சேர்ந்த 40 குதிரைகள் இதில் பங்கேற்கிறது.
தினமும் காலை 6:30 மணி முதல் காலை 11:00 மணி வரையும், மதியம் 3:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை போட்டி நடக்கும். பெங்களூர், கோயம்புத்துார், சென்னை, ஹைதராபாத், திருப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 140 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இறுதி நாளான 31ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது. போட்டியை காண அனுமதி இலவசம்' என்றார்.

