/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை: மாநில அரசு திட்டமிட்டு முடக்கம்; சம்பத் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

ADDED : ஆக 08, 2024 02:00 AM
புதுச்சேரி : புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாத்தில் சம்பத் எம்.எல்.ஏ., பேசியதாவது;
ரேஷன் கடைகள் இயங்கிய இடங்களில் வேறு கடைகள் வந்து விட்டது. புதிய இடத்தில் ரேஷன் கடைகள் அமைக்க அட்வான்ஸ், ஊழியர்களின் நிலுவை தொகை வழங்க அதிக நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும். சிறப்பு குழந்தைகளை கவனிக்கும் ஆசிரியர்கள் பணி மிகவும் சவாலானது.
அந்த ஆசிரியர்களின் நியமான கோரிக்கை பணி நிரந்தரம், ஆண்டிற்கு 12 மாத ஊதியம் வழங்க வேண்டும்.
கோரிமேட்டில் இ.எஸ்.ஐ., மாதிரி மருத்துவமனை அமைக்க மாநில அரசிடம் இ.எஸ்.ஐ., போராடி வருகிறது. ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமல் கோப்பு முடக்கி வைத்துள்ளனர். 4.5 லட்சம் தொழிலாளர்கள் குடும்பம் பயன்பெறும் திட்டத்தை அரசு திட்டமிட்டு முடக்கி வருகிறது. ரூ. 400 கோடி இ.எஸ்.ஐ., ஒதுக்க தயாராக உள்ளது.
கடந்த பட்ஜெட் குப்பை வரி நீக்குவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் குப்பை வரி செலுத்த வேண்டும் என நகராட்சி நோட்டீஸ் அனுப்புகிறது. குப்பை வரி குறித்து தெளிவான பதில் அளிக்க வேண்டும்.
மின்சார பஸ் இயக்கப்படும் என்ற அறிவிப்பு 3 ஆண்டுகளாக அறிவிப்பாக உள்ளது. 200 பிங்க் பஸ் என்ற அறிவிப்பும் செயல்பாட்டிற்கு வர வேண்டும் என கூறினார்.