sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி

/

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி


ADDED : மார் 27, 2024 07:35 AM

Google News

ADDED : மார் 27, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலையொட்டி, தலைமை தேர்தல் அலுலகம், புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையம் இணைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வாசகம் எழுதுதல் போட்டி நடத்த உள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனர் சிவக்குமார் செய்தி குறிப்பு:

வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தமிழ் வாசகம் எழுதுதல் போட்டி நடத்தப்படுகின்றது.

இந்த போட்டியில், வாக்காளர் கடமைகள், 100 சதவீதம் வாக்களிப்பு, நேர்மையான தேர்தல், தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலிகள், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் தேர்தலின் பங்கு, வாக்குச் சாவடியில் வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வீட்டியில் இருந்தே வாக்களிப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி தமிழில் வாசகங்களை வாக்காளர்கள் போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.இதில், எதுகை, மோனை, சந்தம், போன்ற அம்சங்களுடன் ஓசை நயத்துடன் புதியதாகவும், புதுமையானதாவும் வாசகங்கள் இருக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், ஆகியவற்றுடன், அதிகபட்சமாக ஐந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதி, 9443308376 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வரும் 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.சிறந்த வாசகங்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் வழங்கப்படும். பரிசளிப்பு நிகழ்ச்சி 5ம் தேதி நடக்கிறது. இந்த வாசகங்களை வானொலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு, செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us