ADDED : ஆக 09, 2024 02:56 AM

நோய்களைத் தீர்க்கும் செங்கழுநீர் அம்மன் புதுச்சேரி வீராம்பட்டினத்தில் சுயம்பு வடிவில் இருக்கிறாள்.
500 ஆண்டுக்கு முன் செங்கழுநீர் ஓடையில் வீரராகவன் என்பவர் மீன்பிடித்த போது மரக்கட்டை ஒன்று வலையில் சிக்கியது. அதை பிளக்க முயன்ற போது ரத்தம் பீறிட்டது.
அன்றிரவு கனவில் தோன்றி ''செங்கழுநீர் அம்மன் என்னும் பெயரில் மரக்கட்டை வடிவத்தில் இருக்கும் எனக்கு கோயில் அமைத்து வழிபடு. உடல்நலமும், செல்வ வளமும் தருகிறேன்'' என அம்மன் உத்தரவிட்டாள். அதன்படி கட்டப்பட்ட இக்கோயிலில் ஆடி மாதம் முழுவதும் திருவிழா நடக்கும்.
ஆடி ஐந்தாம் வெள்ளியன்று தேர்த் திருவிழாவில் பக்தர்கள் பெருமளவில் கூடுவர். பவுர்ணமியன்று அம்மனை தரிசித்தால் பார்வை குறைபாடு நீங்கும். நோய் நீங்கி உடல்நலம் சிறக்கும்.
எப்படி செல்வது
புதுச்சேரியில் இருந்து 8 கி.மீ.,
நேரம் காலை 6:00 - -11:00 மணி மாலை 4:00 -- 9:00 மணி
தொடர்புக்கு
99940 77671