தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் ஆஜர்

அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் ஆஜர்

அவதுாறு வழக்கு விசாரணை மாஜி அமைச்சர் ஆஜர்


ADDED : மே 28, 2024 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு, முன்னாள் அமைச்சர் சண்முகம் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.

விழுப்புரத்தில் கடந்த 2022ம் ஆண்டு அ.தி.மு.க., சார்பில் நடந்த இரு கண்டன ஆர்ப்பாட்டத்திலும், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த மூன்று வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. காலை 11:00 மணிக்கு சண்முகம் ஆஜரானார். அப்போது, மூன்று வழக்குகளையும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள உத்தரவு நகலை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தனர். அதனை ஏற்ற மாஜிஸ்திரேட் ராதிகா, வழக்குகளின் விசாரணையை ஜூன் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us