தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொ.மு.ச., செயற்குழு கூட்டம்

தொ.மு.ச., செயற்குழு கூட்டம்

தொ.மு.ச., செயற்குழு கூட்டம்


ADDED : ஆக 13, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தொழிலாளர் முன்னேற்றச் சங்க மாநில செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது.

தொ.மு.ச., மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் தலைமை தாங்கினார். தலைவர் அங்காளன் வரவேற்றார். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர் சிவக்குமார், சீனுவாசன், துரை, கண்ணன், விஜயபாஸ்கர், கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில், புதிய தொழிற்சாலைகளை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய உயர்வு சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். அமைப்புசாரா நலவாரியத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி, செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். பஞ்சாலை மற்றும் ஸ்பின்கோ தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும். பி.ஆர்.டி.சி.யில் ஓய்வு பெற்றவர்களுக்கு தர வேண்டிய கிராஜூவிட்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

சங்க மாநில துணைத் தலைவர் காயாரோகணம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us