ADDED : ஆக 13, 2026 07:24 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த் கனவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி ஆமாவாசை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மதியம் 12 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது.
முன்னதாக பெருமாளுக்கு இளநீர், பால், மஞ்சள், பழவகைகள் கொண்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
