/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உப்பனாறு பாலத்திற்கு விடிவு காலம்: கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு திட்ட மதிப்பு ரூ.105 கோடியாக உயர்வு
/
உப்பனாறு பாலத்திற்கு விடிவு காலம்: கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு திட்ட மதிப்பு ரூ.105 கோடியாக உயர்வு
உப்பனாறு பாலத்திற்கு விடிவு காலம்: கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு திட்ட மதிப்பு ரூ.105 கோடியாக உயர்வு
உப்பனாறு பாலத்திற்கு விடிவு காலம்: கவர்னர் கைலாஷ்நாதன் ஆய்வு திட்ட மதிப்பு ரூ.105 கோடியாக உயர்வு
ADDED : செப் 02, 2024 01:20 AM

புதுச்சேரி : உப்பனாறு பாலத்தின் இணைப்பு பகுதியை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த வார இறுதியில் ரூ. 30 கோடியில் இணைப்பு பாலத்திற்கான டெண்டர் வெளியாகிறது.
புதுச்சேரி நகரப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மறைமலையடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலையை இணைக்கும் வகையில், உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. 732 மீட்டர் நீளத்திற்கு இரு பக்கமும் நடைபாதையுடன் கூடிய பாலம் அமைக்க 2008ம் ஆண்டு பூமி பூஜை போடப்பட்டது. முதலில் பணியை எடுத்த நிறுவனம், ரூ.3.5 கோடிக்கு பைல் பவுண்டேஷன் அமைத்ததுடன் பணியை நிறுத்தியது.
மீண்டும் பாலம் அமைக்க கடந்த 2014ம் ஆண்டு ஹட்கோ வங்கியில் ரூ. 37 கோடி கடன் பெற்று, மாநில அரசு நிதி ரூ. 7.15 கோடி சேர்த்து மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
என்.ஆர்.காங்., ஆட்சியில் துவங்கிய பாலம் பணி, 2016 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மழையின்போது வாய்க்காலில் அதிகப்படியாக வரும் தண்ணீர் பாலம் வேலையால் ஊருக்குள் புகுந்துவிடும் என ஆட்சியாளர்கள் கூறியதால், ஆண்டிற்கு 6 மாதம் மட்டுமே பணிகள் என்ற முறையில் தொய்வாக நடந்தது.
வெகு நாட்களாக பணி நடந்ததால், ஒப்பந்த தொகையை விட அதிக செலவினம் ஏற்பட்டுள்ளதாக கூறி 2020ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டது.
கூடுதல் செலவு தொகையை தர கட்டுமான நிறுவனம் ஆர்பிடேஷனில் வழக்கு தொடர்ந்தது. பொதுப்பணித்துறை ரூ. 13 கோடி வழங்க 2021 ஆண்டில் உத்தரவிட்டது. அந்த தொகை செலுத்ததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 15.39 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.
பாலம் கட்ட ஹட்கோ வங்கியில் ரூ.37 கோடி, 7 சதவீத வட்டிக்கு கடன் பெறப்பட்டுள்ளது. ஒரு ஆண்டிற்கு ரூ. 2.3 கோடி வட்டி மட்டும் செலுத்த வேண்டும். கடன் பெற்று 10 ஆண்டுகள் கடந்து விட்டது. ரூ. 37 கோடி கடனுக்கு, தற்போது வரை ரூ. 23 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர கட்டுமான நிறுவனத்திற்கு ரூ. 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. பாலத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 75 கோடியாக உயர்ந்தது.
இந்த நிலையில் மறைமலையடிகள் சாலை மற்றும் காமராஜர் சாலை இணைக்கும் பகுதியில் பிரிகாஸ்ட் முறையில் பாலம் அமைத்து ரவுண்டானாவுடன் சாலை அமைக்க பொதுப்பணித்துறை ரூ. 30 கோடிக்கு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே செலவு ஆன ரூ.75 கோடியுடன், தற்போது திட்டமிட்டுள்ள ரூ. 30 கோடி என மொத்தம் ரூ.105 கோடியாக உப்பனாறு பாலம் பணி உயர்ந்துள்ளது.
கோர்காடு ஏரியை பார்வையிட்டு திரும்பிய கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று உப்பானறு வாய்க்கால் பாலத்தை பார்வையிட்டார். அப்போது, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் பாலத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கினர்.