/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி பங்கு சந்தையில் ரூ. 1 கோடி 'அபேஸ்' சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்
/
போலி பங்கு சந்தையில் ரூ. 1 கோடி 'அபேஸ்' சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்
போலி பங்கு சந்தையில் ரூ. 1 கோடி 'அபேஸ்' சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்
போலி பங்கு சந்தையில் ரூ. 1 கோடி 'அபேஸ்' சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டூழியம்
ADDED : மார் 06, 2025 04:13 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் பெண் உட்பட இருவரிடம் ரூ. 1.02 கோடி பணத்தை மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபத்துடன் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அப்பெண்ணை ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் சேர்த்தனர். அந்த குழுவில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தல் தொடர்பான வீடியோ, பங்கு சந்தையில் அதிக லாபம் கிடைத்ததுபோல் சிலர் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் பதிவிட்டு வந்தனர்.
இதனை கண்டு தானும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அப்பெண், பங்கு சந்தையில் எப்படி முதலீடு செய்வது என கேள்வி எழுப்பினார். மர்ம கும்பல், அப்பெண்ணை மூளை சலவை செய்து பணம் முதலீடு செய்ய துாண்டியது. அப்பெண் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்தார். மர்ம கும்பல் உருவாக்கி கொடுத்த போலியான ஆன்லைன் பங்கு சந்தை பக்கத்தில் அதிக லாபம் கிடைத்து போல காண்பித்தது.
இதனால் அப்பெண் மொத்தமாக ரூ. 82 லட்சம் முதலீடு செய்தார்.
அவரது இணையதள பக்கத்தில் ரூ. 2 கோடி பணம் வந்துள்ளதாக காண்பித்தது. பணத்தை எடுக்க முயற்சித்தபோது, மீண்டும் அதிக பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல் புதுச்சேரி ஆசிரமத்தைச் சேர்ந்த சாக் பட்டேல் என்ற நபர் போலி பங்கு சந்தை இணையதளத்தில் ரூ. 20 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
இரு புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மற்றும் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
டிமேட் வங்கி கணக்கு இல்லாமல் டிரேடிங் செய்யும் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என கூறினார்.