ADDED : மே 10, 2026 07:31 PM
புதுச்சேரி: கைக்கிலப்பட்டில் அதிக குடிப்போதையில் வீட்டில் மயங்கி விழுந்த விவசாயி மருத்துவமனைக்கு செல்லலும் வழியில் இறந்தார்.
திருக்கனுார் அடுத்த கைக்கிலப்பட்டை சேர்ந்தவர் ஏகாம்பரம், 59; விவசாயி. குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று முன்தினம் அதிக குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட ஏகாம்பரம், வீட்டில் மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் ஏகாம்பரத்தை மீட்டு, காட்டேரிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து ஏகாம்பரம் இறந்து விட்டதாக தெரிவித்தார். அவரது மகன் கோபி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
