/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டு பன்றிகளை சுட்டுபிடிக்க வேண்டும் விவசாய சங்கம் கோரிக்கை
/
காட்டு பன்றிகளை சுட்டுபிடிக்க வேண்டும் விவசாய சங்கம் கோரிக்கை
காட்டு பன்றிகளை சுட்டுபிடிக்க வேண்டும் விவசாய சங்கம் கோரிக்கை
காட்டு பன்றிகளை சுட்டுபிடிக்க வேண்டும் விவசாய சங்கம் கோரிக்கை
ADDED : மே 06, 2024 05:39 AM
புதுச்சேரி, : விவசாய பயிர்களையும், விவசாயிகளையும் தாக்கி அழிக்கும் காட்டுபன்றிகளை வனத்துறை சுட்டு பிடிக்க வேண்டும் என, விவசாய சங்கம் கோரிக்கை விடுத்தள்ளது.
இது குறித்து விவசாய சங்க பொதுச்செயலாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை;
புதுச்சேரி பி.எஸ்.பாளையத்தில் தெய்வசிகாமணி, 85; என்ற முதியவர் விவசாய நிலத்திற்கு சென்றபோது காட்டுப்பன்றி தாக்கி காயம் அடைந்தார்.
மேலும், லோகநாதன், 37; தண்டபாணி ஆகியோரையும் காட்டுப்பன்றி தாக்கியுள்ளது. படுகாயமடைந்த தெய்வசிகாமணி, லோகநாதன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தண்டபாணி லேசான காயத்துடன் தப்பினார்.
சன்னியாசிக்குப்பம் கிராமத்தில் ஜெகன் என்ற 9 வயது சிறுவனை வீட்டிற்குள் புகுந்து காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்தார்.
புதுச்சேரி வனத்துறை போர்கால அடிப்படையில், விவசாயத்தையும், விவசாயிகளை தாக்கி அழிக்கும் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க வேண்டும்.
காட்டுப்பன்றி தாக்கி காயமடைந்த நபர்களுக்கு, புதுச்சேரி அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.