/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ டிரைவர் அடித்து கொலை தந்தையுடன் 2 மகன்கள் கைது
/
ஆட்டோ டிரைவர் அடித்து கொலை தந்தையுடன் 2 மகன்கள் கைது
ஆட்டோ டிரைவர் அடித்து கொலை தந்தையுடன் 2 மகன்கள் கைது
ஆட்டோ டிரைவர் அடித்து கொலை தந்தையுடன் 2 மகன்கள் கைது
ADDED : ஜூன் 04, 2024 06:03 AM

விழுப்புரம், : விழுப்புரம், ஆட்டோ டிரைவரை அடித்து கொலை செய்த, மூவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த ஆயந்துார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் விஜயகுமார்,38; ஆட்டோ டிரைவர். இவரது அண்ணன் சேகர்,50; இவர், அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் அருள் (எ) முருகன்,43; என்பவரிடம் 4 ஆண்டிற்கு முன் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை சேகர், கடந்த 27ம் தேதி வட்டியோடு சேர்த்து ரூ.35 ஆயிரத்தை முருகனிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் எழுதி கொடுத்த பிராமிசரி நோட்டை முருகன் தரவில்லை.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு முருகனிடம், பிராமிசரி நோட்டை சேகர் கேட்டார். அப்போது, முருகன் மற்றும் அவரது மகன்கள் சண்முகம்,22; ஆகாஷ்,20; ஆகியோர் சேகரிடம் மேலும் ரூ.5,000 கேட்டு தகராறு செய்தனர்.
அதனையறிந்து அங்கு வந்த சேகரின் தம்பிகள் விஜயகுமார்,38; ஞானபால்,44; ஆகியோர் தட்டிக்கேட்டனர். ஆத்திரமடைந்த முருகன் மற்றும் அவரது மகன்கள், விஜயகுமாரை திட்டி, தாக்கி கீழே தள்ளினர்.
அதில் மயக்கமடைந்த விஜயகுமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு முகையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே விஜயகுமார் இறந்து விட்டதை உறுதி செய்தார். இவருக்கு பேபி என்ற மனைவியும், பரமேஸ்வரி,4; மகளும் உள்ளனர்.
பேபி அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்கு பதிந்து முருகன், சண்முகம், ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.