ADDED : மே 28, 2024 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகப்பன். இவரது மகள், ரிஷிகா, 22; இவர் தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணி செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்தவர் , வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.
உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.