ADDED : ஜூலை 15, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வீட்டில் இருந்து வெளியில் சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி மகள் கீர்த்தனா, 21; இவர் நர்சிங் முடித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
