ADDED : ஆக 03, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: கல்லுாரி படித்து வரும் மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்தவர் தமிழ்மணி மகள் சந்தியா, 18; இவர் புதுச்சேரி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். ஆண் நண்பருடன் பழகியதை அவரது தந்தை கண்டித்தார்.
இந்நிலையில், வீட்டில் இருந்து கடந்த 1ம் தேதி வெளியில் சென்ற சந்தியா மாயமானார். அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்து புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
